மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 6 துறைகள் சார்பில் 304 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் 31 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதேபோல்,18 துறைகள் சார்பில் 21 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com