Madurai Chithirai Thiruvizha | மே 1ம் தேதி இறங்கும் கள்ளழகர் - வைகையில் நடக்கும் மாற்றம்

மே 1ம் தேதி இறங்கும் கள்ளழகர் - வைகையில் நடக்கும் மாற்றம்

கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரம் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா நெருங்கி வரும் நிலையில், மே 1ம் தேதி நடைபெற உள்ள கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு, வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகளை அகற்ற தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து செயல்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் கழிவுகளை ஆற்றில் கலக்காமல் இருந்தால் வைகையை மேலும் சுத்தமாக வைத்திருக்க முடியும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com