Madurai Chithirai Thiruvizha | "தேவையா இது எல்லாம்.." - டிக்கெட் வைத்திருந்தும் அனுமதிக்காத போலீஸ்

Madurai Chithirai Thiruvizha | "தேவையா இது எல்லாம்.." - டிக்கெட் வைத்திருந்தும் அனுமதிக்காத போலீஸ்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண பணம் கொடுத்து டிக்கெட் பெற்றும், உள்ளே அனுமதிக்கப்படாததால் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... திருக்கல்யாணத்தைக் காண, அறநிலையத்துறை சார்பில் 200 மற்றும் 500 ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பாஸ்கள் வழங்கப்பட்டன. இதைப் பெற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர். ஆனால், இருக்கை வசதியை விடக் கூடுதலாக பாஸ்கள் வழங்கப்பட்டதாகக் கூறி, கையில் டிக்கெட் வைத்திருந்த பலரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்களை ஏன் அனுமதிக்கவில்லை எனக் கேட்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தரிசனம் செய்ய முடியாததால் பாஸ் வாங்க செலுத்திய பணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

X

Thanthi TV
www.thanthitv.com