`24 நாட்களில்..' - கயவர்களை பிடிக்க கைதிகள் செய்த அசத்தல்

`24 நாட்களில்..' - கயவர்களை பிடிக்க கைதிகள் செய்த அசத்தல்
Published on

இருபத்து நான்கே நாள்களில் மதுரை மத்திய சிறையிலுள்ள சிறைவாசிகளால் நடமாடும் கண்காணிப்பு வாகனம் அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளது... முன்னாள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தங்கள் மாவட்ட காவல் வாகனத்தை சிசிடிவி பொருத்தி நடமாடும் கண்காணிப்பு வாகனமாக மாற்றும் பணியை மதுரை சிறை நிர்வாகத்திற்கு வழங்கிய நிலையில், 4 HD கேமராக்கள், ஜிபிஎஸ் வசதி, இணையம் என சகல வசதிகளுடன் நவீன தொழில்நுட்பத்தில் சிறைவாசிகள் இந்த கண்காணிப்பு வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இந்த வாகனம் மூலம் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலிலும் இது முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com