விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை போட்ட அதிரடி உத்தரவு!

x

ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் விபத்தை ஏற்படுத்தி மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, ஷேர் ஆட்டோ ஓட்டுநர் செல்லபாண்டியன் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்தார்.

மேலும், ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும், அதிகமான நபர்களை ஏற்றும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்