ஐகோர்ட் மதுரை பெஞ்ச் கடும் அதிருப்தி

x

மனமகிழ் மன்றங்கள் குறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்கள் மதுபான கடைகளாக மட்டுமே செயல்படுவதாக மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அறந்தாங்கியை சேர்ந்த மனோகரன் என்பவர் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக்கடை செயல்படுவதாகவும், இதனை மூட உத்தரவிட வேண்டும் என்று மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

அறந்தாங்கியில் விதிகளுக்கு உள்பட்டு தான்

மனமகிழ் மன்றம் செயல்படுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மனமகிழ் மன்றங்கள், விளையாட்டு, சமூக சேவைக்காக உருவாக்கப்பட்டன என்றாலும், தற்போது பெரும்பாலானவை மதுபான விற்பனை மையங்களாகவே செயல்படுகின்றன என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்

மாநில அளவில் உள்ள அனைத்து மனமகிழ் மன்றங்களையும் ஆய்வு செய்யக்கூடாது என ஏன் உத்தரவிடக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பதிவுத்துறை ஐ.ஜி., மனமகிழ் மன்ற பதிவு விதிமுறைகள் மற்றும் மதுவிற்பனை அனுமதி குறித்த விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்