சட்ட விரோத மணல் விவகாரம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை

சட்ட விரோத மணல் விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தலைமை செயலாளரை காணொலி மூலமாக விசாரிக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
சட்ட விரோத மணல் விவகாரம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை
Published on

சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க

அனுமதி பெற்று சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. அவை மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை நிராகரித்த நீதிபதிகள் சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பது குறித்து அரசின் நிலைபாடு என்ன என்று கேள்வி எழுப்பினர். அரசு இது குறித்து ஏதேனும் வழிமுறைகளை பிறப்பித்து உள்ளதா என்றும், உயர்நீதிமன்ற மதுரை கிளை சவுடு மண் அள்ள தடை விதித்த பின்பும் உபரி மண் என்ற பெயரில் அனுமதி கொடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சமர்ப்பிக்க கூடிய திட்டஉத்தரவுகள் அனைத்தும் பேப்பர் அளவிலேயே உள்ளது இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறிய நீதிபதிகள், சட்ட விரோத மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் நீதி மன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும் இதே நிலை தொடர்ந்தால் தமிழக அரசின் தலைமை செயலரை காணொளி மூலமாக விசாரிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com