காவல் ஆய்வாளரிடம் தகராறு செய்த ஆயுதப்படை காவலர் : கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் ராஜபிரபு என்பவரிடம் விசாரணை நடத்தினார்.
காவல் ஆய்வாளரிடம் தகராறு செய்த ஆயுதப்படை காவலர் : கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Published on
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் ராஜபிரபு என்பவரிடம் விசாரணை நடத்தினார். இதற்கு ஆயுதப்படை காவலர் ராஜபிரபு, தன்னிடம் எப்படி விசாரிக்கலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ராஜபிரபுவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com