ஜாக்கி உதவியுடன் நகர்த்தப்படும் 100 ஆண்டு பழமையான கோவில்

மதுரையில் மேம்பாலம் கட்டப்படுவதால், அங்குள்ள 100 ஆண்டு பழமையான கோவில், ஜாக்கி உதவியுடன் 25 அடி நகர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஜாக்கி உதவியுடன் நகர்த்தப்படும் 100 ஆண்டு பழமையான கோவில்
Published on
மதுரை நத்தம் சாலையில், மேம்பாலம் ஒன்று புதிதாக கட்டப்படுகிறது. இதில் அங்கு உள்ள 100 ஆண்டு பழமையான மந்தையம்மன் கோவில் இடிபடும் சூழல் உருவானது. இதையடுத்து, கோவிலின் பழமை மாறாமல் ஜாக்கி உதவியுடன் நகர்த்தப்பட்டு வருகிறது. இதற்காக 2 மாதங்களாக ஜாக்கி உதவியுடன் கோவிலை மேலே உயர்த்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் 25 அடி நகர்த்தும் பணிகள் நடைபெறுகிறது. 4825 சதுர அடி பரப்பளவும், 350 டன் எடை கொண்ட கோவிலை 350 ஜாக்கிகளின் உதவியுடன் நகர்த்தப்பட்டு வருகிறது. 25 லட்சம் செலவில் நடைபெறும் இந்தப் பணிகள் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 30 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com