மதுரையில் 8 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு | Madurai

மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வர உள்ளதால், 8 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், நான்கு துணை ஆணையர் எட்டு உதவி ஆணையர் அடங்கிய ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று வர உள்ளதால், விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு போலீசார், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com