மதுரை விமான நிலைய விரிவாக்கம்- உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை விமான நிலைய விரிவாக்கம்- உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதி அளித்து சென்னை உயர்நீதின்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்த சின்ன உடைப்பு பகுதி மக்கள், தங்களின் மறுகுடியமர்வு தொடர்பாக எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை எனக் கூறி மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தகுதியுள்ள நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உத்தரவிட்டனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று அளவிட அப்பகுதி மக்கள் இடையூறு செய்யக்கூடாது என்றும்,அதேசமயம், குடியிருப்பு வசதி செய்து தரும் வரை மக்கள் அங்கு வந்து செல்ல எவ்வித தடையும் விதிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
