மதுரையில் எய்ம்ஸ்..தொடங்கிய கட்டுமான பணிகள்..வெளியான ட்ரோன் காட்சி | Madurai AIIMS
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின் கிடப்பில் போடப்பட்ட கட்டுமானப் பணிகள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. பிரபல தனியார் கட்டுமான நிறுவனமான L&T சார்பில் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை, சமன் செய்யும் பணிகளை தொடங்கினர். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட உள்ள நிலையில்,
L & T நிறுவனம் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி வருகிறது. இது தொடர்பான கழுகு பார்வை காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Next Story
