டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அவுட் போஸ்ட் காமராஜர் பல்கலை கல்லூரி அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.