"பாஸ் மார்க் வாங்க வேண்டியோர், டாஸ்மாக் செல்கின்றனர்" - மதுரை ஆதீனம்

இன்றைய இளைஞர்களுக்கு தேச பக்தியும், தெய்வ பக்தியும் இல்லை என்ற மதுரை ஆதீனம், பாஸ் மார்க் வாங்குவதற்கு பதில், டாஸ்மாக் செல்வதாக சாடினார்.

இன்றைய இளைஞர்களுக்கு தேச பக்தியும், தெய்வ பக்தியும் இல்லை என்ற மதுரை ஆதீனம், பாஸ் மார்க் வாங்குவதற்கு பதில், டாஸ்மாக் செல்வதாக சாடினார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக குமரி மாவட்டம் சென்றிருந்த அவர், நாகர்கோவிலில் தந்தி டிவிக்கு சிறப்புப் பேட்டியளித்தார். அப்போது, 2009.ல் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், அன்றைக்கு அதிபராக இருந்த ராஜபக்சவை ஐ.நா.கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றார். மேலும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என்றும், அது நம்மிடம் இருந்திருந்தால், மீனவர்கள் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com