

மதுரை மாவட்டம் நரிமேட்டில் கட்டபொம்மன் தெருவில் கோபிநாத் என்பவர் அடகு கடை நடத்திவருகிறார். நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வந்த கோபிநாத், இன்று மதியம் கடையை திறக்க சென்றுள்ளார். கடையில் இருந்த ஆயிரத்து 483 சவரன் நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோபிநாத், நரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளையும் ஆய்ந்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளார்.