``Made In India.. இனி இந்தியா உலகை இயக்கும்''
இந்திய தயாரிப்பு மின்சார வாகனங்களை உலகம் இயக்கும் என பிரதமர் மோடி பெருமிதம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சுசுகி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, உலகளாவிய முதல் பேட்டரி மின்சார வாகனமான "இ விட்டாரா" வை பிரதமர் மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள், மேக் இன் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக மாறிவிட்டதாகவும்,
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு, வலிமையின் சின்னமாக மட்டுமில்லாமல், இந்தியாவின் மீதான உலகளாவிய நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் உள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பேட்டரி முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் TDSG பேட்டரி ஆலைக்கு அடித்தளம் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிப்போம் முயற்சி உலகளாவிய மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர்,
செமிகண்டக்டர் துறையில் இந்தியா முன்னேறி வரும் நிலையில், இதுவரை 6 ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், Made in India என்று கூறும் மின்சார வாகனங்களை உலகம் இயக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
