GangWar | பட்டாக்கத்தி, கோடாரி.. கேங்வார்.. சென்னை அருகே பதற்றம்.. மக்கள் அச்சம்.. போலீஸ் குவிப்பு
பட்டாக்கத்தி, கோடாரி.. கேங்வார்.. சென்னை அருகே பதற்றம்.. மக்கள் அச்சம்.. போலீஸ் குவிப்பு
#gangwar #navalur காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அங்கன்வாடி ஜன்னல் மேல்பகுதியில் பட்டாகத்தி, கோடாரி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. படப்பை அருகே உள்ள நாவலூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் இருதரப்பு மோதலைத் தொடர்ந்து, அந்தப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, நாவலூர் அங்கன்வாடி மையத்தின் பின்புற ஜன்னல் ஸ்லாப் (Slab) மீது பட்டாக் கத்தி மற்றும் கோடாரி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையத்தில் ஆயுதங்களை வைத்தது யார் என போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
