அடுத்த ஆண்டு இறுதிக்குள் "12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு" - மாஃபா பாண்டியராஜன்

மத்திய அரசின் நிதியுடன் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் புதிய பயிற்சி மையத்தை Mofoi நிறுவனம் துவங்கியுள்ளதாக அதன் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா .பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் நிதியுடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 7 இடங்களில் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் 12 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தர இலக்கு நிர்ணையித்திருப்பதாகவும் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com