திருச்செந்தூர் தெய்வானைக்கு சகல வசதிகளுடன் சொகுசு வீடு - இத்தனை லட்சமா?
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு பிரமாண்ட அரங்கத்தில் புதிய வீடு தயாராகி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 26 வயது கொண்ட தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் யானைக்காக 10 லட்சம் மதிப்பில் சகல வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட குடில் கட்டப்பட்டுள்ளது. எப்போதும் குளிர்ந்தபடியே இருக்கும் வகையில் குடிலின் மேற்கூரை ஸ்பான்சு கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றோட்ட வசதிக்காக வலை கொண்டு, குடில் அமைக்கப்பட்டுள்ளதுடன் 2 மின் விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளது. வாட்டர் டேங்க், குடிலுக்குள் யானை நீர் அருந்த பிரத்யேக தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் யானை பாகன் ஓய்வெடுப்பதற்கும் தனியாக சிறிய குடில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த காளிச்சாமி ஜெயந்தி பொது தொண்டு அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் செய்து கொடுத்துள்ளார்கள். விரைவில் கோவில் யானை தெய்வானை சரவண பொய்கை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சொகுசு வீட்டில் குடியேற உள்ளது.
