உள்ளே பல லட்சம் மதிப்பிலான சொகுசு கார்கள் - கண்டெய்னரில் பற்றிய தீ
Fire accident || உள்ளே பல லட்சம் மதிப்பிலான சொகுசு கார்கள் - கண்டெய்னரில் பற்றிய தீ - சென்னை பெங்களூர் NH-ல் பரபரப்பு
வேலூர் பொய்கை அருகே கொழுந்துவிட்டு எரியும் கண்டைனர் லாரி
சொகுசு காரை ஏற்றி வந்த கண்டைனர் லாரி இன்று விபத்துக்குள்ளானதால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் மின்கம்பத்தின் அடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டைனர் லாரி மீது மின்சாரம் பாய்ந்து டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து.தீயணைப்பு துறை வீரர்கள் தற்போது விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கரும்புவை சூழ்ந்ததால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
வேலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இதில் காருக்கும் ஓட்டுனருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்பவர் சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூருக்கு சுமார் தலா ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பிலான 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான இரண்டு கார்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிச் செல்லும்போது லாரி வேலூர் அடுத்த பொய்கை - சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரியை வளைத்த போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த காலி இடத்தில் லாரி சிக்கியுள்ளது. அப்போது லாரிக்கு மேலே சென்ற மின் கம்பி காற்றினால் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் லாரியின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்த நிலையில் விரைந்து வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில் இரண்டு சொகுசு கார் மற்றும் ஓட்டுநருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
