Karur Accident | ஸ்கூட்டி மீது சொகுசு கார் மோதிய சம்பவம்.. மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை

ஸ்கூட்டி மீது சொகுசு கார் மோதிய சம்பவம்.. மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை

#Karur #Accident #CarAccident #ThanthiTV Karur Accident | ஸ்கூட்டி மீது சொகுசு கார் மோதிய சம்பவம்.. மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை - கரூரில் சோகம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே, ஸ்கூட்டி மீது பி.எம்.டபிள்யூ., சொகுசு கார் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. பொய்கைப்புதூர் பகுதியில் நடந்த இந்த விபத்தில், ஒரே ஸ்கூட்டியில் சென்ற கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் சிக்கினர். இதில் பிரதாப், மாதேஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு மாணவரான ஸ்ரீதர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரதாப்பின் தம்பியான கார்த்திகேயன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் காரில் பயணித்த மூன்று பேரும் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன், தம்பி உள்ளிட்ட மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

X