பொள்ளாச்சியில் அதிர்ஷ்டமான `108’ - கர்ப்பிணிக்கு பிறந்த ட்வின்ஸ்
108 ஆம்புலன்சில் இரட்டை பெண்குழந்தைகளை பிரசவித்த பெண்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு இரட்டை பெண்குழந்தைகள் பிறந்துள்ளன. பொள்ளாச்சியை சேர்ந்த கூலி தொழிலாளி
ஜாகிர் உசேனின் மனைவி சரண்யா குமாரி பிரசவ வலி ஏற்பட்டதும், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி உள்ளனர். திடீரென வழியில் பிரசவ வலி அதிகமானதால் சரண்யா தேவிக்கு மருத்துவர் துர்கா தேவி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இளைய பாரதி ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் சரண்யா குமாரிக்கு ஆம்புலன்ஸில் வைத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
Next Story
