சென்னையில் தனியாக ரூம் போட்ட காதல் ஜோடி - ஒற்றை வீடியோ கால்.. அலறி குளியலறை ஓடிய காதலி

x

சென்னையில் பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின்பேரில், காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். நெல்லையைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஓராண்டாக தாம்பரத்தில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கன்னியாகுமரியை சேர்ந்த சஹின் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக தெரிகிறது. இந்த காதல் ஜோடி, சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளது. அப்போது சஹின் தனது நண்பர்களுக்கு வீடியோ கால் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அச்சமடைந்த அந்தப் பெண், குளியலறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டு, தன்னுடன் பணியாற்றும் தோழிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன்பேரில், ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதில், சஹின் தனது நண்பரிடம் திருவனந்தபுரம் பயணம் குறித்து பேசியதும், அதனை அந்தப் பெண் தவறாக புரிந்து கொண்டு கூச்சலிட்டதும் தெரியவந்தது. அப்போது, அமைதிப்படுத்துவதாகக்கூறி சஹின் மற்றும் அவரது நண்பர் பெஜின் ஆகியோர்,

தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் பாலியல் புகார் அளித்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்