காதலியுடன் பேச முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை
நாமக்கல் அருகே காதலிடம் பேசமுடியாத விரக்தியால் கல்லூரி விடுதியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப்ராஜ் அதே பகுதியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்ததைத் அடுத்து , அந்த பெண் பிரதீப்ராஜிடம் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த பிரதீப்ராஜ் கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Next Story
