Love Marriage Issue | கொட்டும் மழையில் இறந்த குழந்தையுடன் கணவர் வீட்டு முன் இளம்பெண் செய்த செயல்

x

இறந்த குழந்தையுடன் கணவர் வீட்டு முன் இளம்பெண் தர்ணா

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் இறந்த பச்சிளம் குழந்தையுடன் கணவர் வீட்டு முன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார். கார்த்தி, இந்துமதி ஆகிய இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 6 நாட்களுக்கு முன்பு, இந்துமதிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், கார்த்தி குடும்பத்தினர் யாரும் சென்று பார்க்கவில்லை. இதற்கிடையே குழந்தை உயிரிழந்ததால் இறந்த குழந்தையுடன் கணவர் வீட்டு முன் கொட்டும் மழையில் இந்துமதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கணவர் வீட்டில் யாரும் இல்லாததால், அவரை போலீசார் சமாதானப்படுத்தி பேரூராட்சி செலவில் குழந்தையை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்