காதல் விவகாரம்- இளம் பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் சரக்கப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சுணன்- மகேஸ்வரி தம்பதியின் மகள் சுஷ்மிதா. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சுஷ்மிதா சடலமாக மீட்கப்பட்டார்.
காதல் விவகாரம்- இளம் பெண் தற்கொலை
Published on

சேலம் மாவட்டம் சரக்கப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சுணன்- மகேஸ்வரி தம்பதியின் மகள் சுஷ்மிதா. இவர், அப்பகுதி இளைஞர் ஒருவரை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுஷ்மிதா காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவரது தாய் மகேஸ்வரி, விஷ மருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சுஷ்மிதா சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com