Love Issue | மகளை காதலித்த இளைஞரை நடுரோட்டில் கண்டதுண்டமாக வெட்டி போட்ட `பிரதான’ கட்சி நிர்வாகி
காதலன் வெட்டிக் கொலை - காதலியின் தந்தை உட்பட 4 பேர் கைது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, மகளை காதலித்த இளைஞரை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.... தையூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் பிரவீன், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது... இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தையும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான ஏழுமலை, அவரது மகன் கௌதம் உள்ளிட்டோர் பிரவீனை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார்... இந்த நிலையில், 5 பேர் கொண்ட கும்பல் காரில் அரிவாள்களை மறைத்து கொண்டு வந்து, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நடுரோட்டில் பிரவீனை சுற்றிவளைத்து தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியது.... ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரவீன், 3 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இளைஞரை வெட்டி சாய்த்த தந்தை ஏழுமலை, மகன் கவுதம் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்...
