3 கூட்டங்களில் பங்கேற்காததால் கவுன்சிலர் பதவி பறிபோனது

கடந்த மூன்று நகர்மன்ற கூட்டங்களில் பங்கேற்காத செங்கோட்டை நகராட்சி கவுன்சிலரை தகுதி இழப்பு செய்து செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் புனிதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அரசாணையில் வெளியிடுவதற்கான அறிவிப்பையும் தற்போது நகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள நிலையில், மூன்று கூட்டங்களில் பங்கேற்காத 14வது வார்டு கவுன்சிலர் பொன்னுலிங்கம் தகுதி இழப்பு செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை நகராட்சி பகுதியில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com