ஆன்லைன் ரம்மியால் இழப்பு - கல்லூரி பேராசிரியர் தற்கொலை
அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ரூ. 25 லட்சத்தை இழந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தினகரன்( 42). இவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்துமதி . இவர் குருவராஜபேட்டையில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் மகள், 5 வயதில் மகன் உள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் உடையவர் . இந்த ஆன்லைன் ரம்மியில் ரூ. 25 லட்சம் வரை பணத்தை இழந்ததாக தெரிகிறது.
இந்த கடன் பணத்தை அடைக்க வீட்டுக் கடன் மற்றும் நகை கடன் வாங்கி அடைத்துள்ளார். அது மட்டுமின்றி தெரிந்தவர்களிடமும் கடனாக பணத்தை வாங்கி மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
அந்த பணமும் போதாத நிலையில் கடன் செயலிகளில் கடன் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் கடன் பிரச்சனையை தீர்த்து விட்டு வருமாறு சொல்லி தற்காலிகமாக அவரை பணியிலிருந்து நிறுத்தி வைத்துள்ளனர்.
ரம்மியால் பணத்தை இழந்தது மட்டுமின்றி கல்லூரி நிர்வாகமும் அவரை பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்த நிலையில் சித்தேரி பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தண்டவாளத்தின் முன்பாக வாலிபர் ஒருவர் நிற்பதை பார்த்து ரயில் என்ஜின் டிரைவர் ஒருவர் இறந்து விட்டதாக சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன
