Nilgiri Accident | காரை ஆகாயத்தில் பறக்கவிட்டு சாய்ந்த லாரி.. நெஞ்சை பதறவைத்த கொடூர விபத்து

x

காரை ஆகாயத்தில் பறக்கவிட்டு சாய்ந்த லாரி.. நெஞ்சை பதறவைத்த கொடூர விபத்து

லாரி மோதி 30 அடி பள்ளத்தில் விழுந்த கார்

குன்னூர் உதகை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டின் மேல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதியதில் 30 அடி பள்ளத்தில் கார் தூக்கி வீசப்பட்டது. லாரியும் சாலை ஓரத்தில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற லாரி குன்னூர்-ஊட்டி சாலையில் சிடிசி காலனி அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குடியிருப்பின் மேல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதியது. இதில் கார் 30 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் லாரியும் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் லேசான காயம் அடைந்த நிலையில் விபத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்