Lorry Driver | காலேஜ் மாணவனுடன் ஓரினச் சேர்க்கை ஆசையில் சென்ற லாரி டிரைவருக்கு அதிர்ச்சி

x

ஓரின சேர்க்கைக்கு அழைத்து லாரி ஓட்டுநரிடம் நகை, பணம் பறிப்பு

சென்னை துரைப்பாக்கத்தில், ஓரின

சேர்க்கைக்கு அழைத்து லாரி ஓட்டுநரிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை, செயலி மூலம் அறிமுகமான கல்லூரி மாணவர் வெங்கடபிரசாத், துரைப்பாக்கம் பாண்டியன் நகருக்கு அழைத்துள்ளார். அங்குள்ள கழிப்பறையில், வெங்கடபிரசாத் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து சத்யராஜை தாக்கி, தங்கக் கம்மல் மற்றும் கூகுள் பே மூலம் 6,300 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார், வெங்கடபிரசாத், விக்னேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய மூவரை கைது செய்து, பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்