வாடிப்பட்டி : மர்ம நபர்களால், லாரி ஓட்டுனர் வெட்டிக் கொலை

லாரி ஓட்டுநரை வழிமறித்து, வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாடிப்பட்டி : மர்ம நபர்களால், லாரி ஓட்டுனர் வெட்டிக் கொலை
Published on

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டு நீரோத்தான் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ், வழக்கம்போல், டீ கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, குறுக்கே வழிமறித்த மர்ம கும்பல், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. படுகாயமடைந்த ஓட்டுநர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சோழவந்தான் போலீசார், உடலை கைப்பற்றி, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சுரேஷ்-க்கும் அவரது உறவினருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. மோப்ப நாய் அர்ஜூன் சம்பவ இடத்தில் இருந்து, வயல்வெளியில் சிறிது தூரம் ஓடி நின்றது. தடயங்களை சேகரித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com