கேரளாவில் தமிழக லாரி கிளீனர் கல்லால் அடித்து கொலை

கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த லாரி கிளீனர் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் தமிழக லாரி கிளீனர் கல்லால் அடித்து கொலை
Published on
மேட்டுப்பாளையத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு தமிழக லாரி கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்றது. கொச்சின் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் காரில் வந்த மர்ம நபர்கள் லாரி மீது சரமாரியாக கல்வீசி தாக்கியுள்ளனர். இதில், லாரி கிளீனர் முபாரக் பாஷா மற்றும் ஓட்டுனர் நூருல்லா படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய முபாரக் பாஷாவை ஓட்டுனர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிளீனர் முபாரக் உயிரிழந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com