நேருக்கு நேர் மோதிய லாரி, பைக் - ஒருவர் பலி.. ICU-வில் துடிக்கும் மற்றொரு உயிர்
நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழிச்சாலையில், லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். லெப்பை குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது மருமகன் செந்தில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
