Lorry Accident | நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - ஸ்தம்பித்த சென்னை - பெங்களூரு NH

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த கனரக லாரியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சீதாராம் நகர் பகுதி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் நோக்கி சென்ற கனரக லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலையின் குறுக்கே விழுந்த கனரக லாரி மீட்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்தில் அணிவகுத்து நிற்பதால் கவிழ்ந்து கிடக்கும் லாரியை விரைந்து மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com