2 ஆண்டுகளுக்கு ஒரு முறை லாரிகளுக்கு தகுதி சான்று : புதிய உத்தரவு அமல் - லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் லாரிகளுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை, தகுதிச்சான்று பெற்றால் போதும் என கொண்டுவரப்பட்டும், அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை லாரிகளுக்கு தகுதி சான்று : புதிய உத்தரவு அமல் - லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி
Published on

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் லாரிகளுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை, தகுதிச்சான்று பெற்றால் போதும் என கொண்டுவரப்பட்டும், அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் ஆண்டுதோறும் லாரிகளுக்கு தகுதி சான்று பெற வேண்டி உள்ளதால், கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறி, அதை அமல்படுத்த லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, சென்னை டிரான்ஸ்போர்ட் கமிஷனர் இதற்கான உத்தரவை வழங்கினார். அதன்படி 8 வருடங்களுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதி சான்று பெற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது அமலுக்கு வந்தது. இதனால் லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com