Lord Sivan | சிவன் சிலைக்கு கீழ் தெரிந்த 4 மனித உருவங்கள் - சிவாலயத்தில் நிகழ்ந்த அதிசயம்
சிவாலயத்தில் புனரமைப்பு பணியின் போது பழங்கால தங்க தகடுகள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ திருநாகேஷ்வரமுடையார் கோயிலில் புனரமைப்பு பணியின் போது பழங்கால தங்க தகடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன..இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் தமிழக அரசு சார்பில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.. இந்நிலையில் திருப்பணியின்போது சுமார் 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு சிவன் சிலையை தூக்கிய போது 4 மனித உருவம் பொறிக்கப்பட்ட 16.600 கிராம் எடை கொண்ட தங்க தகடுகள், ராஜா உருவம் பொறிக்கப்பட்ட சிதலமடைந்த தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டன.
Next Story
