பாறை நடுவே மயில் வாகனத்தில் தோன்றிய முருகன்.. வைரலான வீடியோ - வேலூரில் குவியும் பக்தர்கள்
பாறைகளுக்கிடையே கண்டெடுக்கப்பட்ட முருகன் சிலை
அணைக்கட்டு, கரடிகுடி பகுதியில் 4 நாட்களுக்கு முன்பாக பாறைகளுக்கு இடையே கண்டெடுக்கப்பட்ட முருகன் கற்சிலையை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பாறைகள் சூழ்ந்த குன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி அந்த குன்று மீதுள்ள பாறைகளுக்கு இடையே முருகர் சிலை இருப்பதாக அருள் வந்த ஒருவர் கூறியதன்படி கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக
வலைதளத்தில் பரவியதை தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.
இது குறித்த தகவலின் படி வருவாய் துறை அதிகாரிகள், மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை ஆய்வு செய்து, 2 அடி உயரம் 1 அடி அகலமுடைய மயில் மீது முருகன் அமர்ந்துள்ள கற்சிலை எனவும் கூறினர். மேலும் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்த பின் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
