பிரபல பாஸ்டர் ஜான் ஜெபராஜ்-க்கு கோவை போலீஸ் போட்ட ஸ்கெட்ச்
போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ் , வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்களுக்கு கோவை மாநகர காவல் துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ், 14 வயது மற்றும் 17 வயது சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை, தனிப்படை போலீசார் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
Next Story
