இந்த அதிசயத்தை பாருங்க மக்களே... வியக்க வைத்த இரட்டை சகோதரிகள்

x

தூத்துக்குடியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் +2 பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெற்று அசத்திய இருவரும் மேற்படிப்பு ஒரே கல்லூரியில் படிக்க இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த ஜேம்ஸ் அற்புதராஜ் - ஷிபா ஜேம்ஸ் தம்பதியின் மகள்கள் பாலின் காருண்யா மற்றும் இவாஞ்சலின் சௌந்தர்யா ஆகியோர் +2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.தனியார் பள்ளியில் பயின்ற இருவரும் ஒரே மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடத்தையும், மாவட்ட அளவில் 2ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் முக்கிய பங்காற்றியதாக இருவரும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்