"கொல்ல வந்த மூஞ்ச பாரு" - வேட்டைக்கு வந்த சிறுத்தை போஸ் கொடுத்த வீடியோ

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட கோக்கால் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தையின் காட்சி வெளியாகியுள்ளது. தேயிலைத் தோட்ட உரிமையாளர் ரவி நாய் குறைக்கும் சத்தம் அதிகம் கேட்டதால் வந்து பார்த்தபோது, நாய்களை வேட்டையாட சிறுத்தை அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரவி அதனை வீடியோ எடுத்துள்ளார். ஆனால் சிறுத்தை நீண்ட நேரமாக அங்கு போஸ் கொடுத்தப் படி படுத்திருந்தது ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தினாலும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்