பலாப்பழத்தை பறிக்க போராடும் ஒற்றை யானை - வைரலாகும் Cute வீடியோ

x

பலாப்பழத்தை பறிக்க போராடிய யானை - பரவும் காட்சி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பலாப்பழம் பறிப்பதற்காக யானை ஒன்று நீண்ட நேரம் போரடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடி வருகிறது. குறிப்பாக பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் அதனை பறித்து உண்பதற்காக கரிய சோலை பகுதிக்கு வந்த ஒற்றை யானை ஒன்று பலா மரத்தில் உள்ள பலாப்பழத்தை பறிப்பதற்காக நீண்ட நேரம் போராடியது. ஒரு கட்டத்தில் இரண்டு பின்னங் கால்களில் நின்று மரத்தில் தனது தும்பிக்கை மூலம் நம்பிக்கையாக பலாப்பழத்தை பறிக்க முயன்றது. ஆனால் பலாப்பழம் அதிக உயரத்தில் இருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்த அந்த யானை அங்கிருந்துச் சென்றது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பர​வி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்