லண்டன் மாப்பிள்ளை பராக்... சிக்கிய இளம்பெண்... பகீர் சம்பவம்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் லண்டன் டாக்டர் மாப்பிள்ளை என கூறி இளம்பெண்ணிடம் 13.15 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்திற்காக இளம்பெண் இணையதளம் மூலம் வரன் தேடி உள்ளார், அப்போது லண்டன் டாக்டர் மாப்பிள்ளை என்று அறிமுகமாகிய மர்ம நபர் வாட்ஸ் அப் கால் மூலம் நன்றாக பேசியுள்ளார், இளம்பெண்ணை பார்ப்பதற்காக லண்டனில் இருந்து வருவதாக தெரிவித்த மர்ம நபர். டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள், இமிகிரேஷன் அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள், ஜிஎஸ்டி உள்பட பல்வேறு காரணங்களை கூறி அந்த இளம்பெண்ணிடம் இருந்து 13 லட்சத்து15 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து நீலகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்