லோக் அதாலத்- மொத்தம் 86,638 வழக்குகளில் தீர்வு...

தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 ரூபாய் மதிப்பிலான, 86 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
லோக் அதாலத்- மொத்தம் 86,638 வழக்குகளில் தீர்வு...
Published on

தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 ரூபாய் மதிப்பிலான, 86 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆறு அமர்வுகள், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பாக 436 அமர்வுகள் உள்பட 468 அமர்வுகளில், 2 லட்சத்து 47 ஆயிரம் வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாநிலம் முழுவதும், 283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 ரூபாய் மதிப்பிலான, 85 ஆயிரத்து 638 வழக்குகள் தீர்வுக்காக காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com