"குடும்பத்தோடு வீட்டிற்குள் வைத்து சீல்... குழந்தைக்கு பால், சாப்பாடு வாங்க கூட வெளியே போக முடியல"

x

குடும்பத்தோடு வீட்டிற்குள் வைத்து சீல்... குழந்தைக்கு பால், சாப்பாடு வாங்க கூட வெளியே போக முடியல" - குமுறும் குடுபத்தினர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களை வீட்டிற்குள் வைத்து சீல் வைத்தால் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தப்பன்குடிக்காட்டில் சுயம்பு ராஜ் என்பவர் மரப்பட்டறை நடத்தி வருகிறார். அதன் பின்பகுதியில் வீடு கட்டி அவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், அவர்களது வீடு கோயில் நிலத்தில் உள்ளதாக கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்றுள்ளனர். இதையடுத்து அவகாசம் கேட்டு தானே ஆக்கிரமிப்பை அகற்றிகொள்வதாக கடிதம் எழுதி கொடுத்ததாகவும், ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களை

வீட்டிற்குள் வைத்து சீல் வைத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்