ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? - வரும் 27ம் தேதி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

கொரோனா தடுப்பு பணியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? - வரும் 27ம் தேதி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
Published on

கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை 650 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் உயரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இது குறித்து வரும் 27ம் தேதியன்று காணொலி வாயிலாக பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். பாதிப்பு எண்ணிக்கை குறையாத காரணத்தால் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அந்த ஆலோசனையின்போது முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, இதனிடையே வரும் 24ம் தேதி பஞ்சாயத் ராஜ் தினத்தன்று நாடு முழுவதும் நடக்கும் கிராம பஞ்சாயத் நிகழ்ச்சிகளில் பிரதமர் காணொலி மூலம் கலந்து கொள்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com