ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி தவிர மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள்,நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு கலாசார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றிற்கு நீட்டிக்கப்பட்ட தடை தொடரும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டும் அனுமதி, இறுதி சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com