ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகள் உடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். ஓட்டுனர், நடத்துனர்களுக்கு முக கவசம், கையுறை மற்றும் hand sanitizer வழங்கப்படும் என்றும் பேருந்துகளை இயக்குவதற்கு முன் அவர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.