மதுரை மாவட்டத்திற்கு ஜூலை 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

மதுரை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
மதுரை மாவட்டத்திற்கு ஜூலை 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
Published on

* மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

* தமிழகம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், மதுரைக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் வரும் 5 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

* இந்த நிலையில், வரும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்துக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகள் அனுமதிக்கப்படும் என்றும் , கட்டுப்பாட்டு பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

* தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும் என்றும், அந்த பகுதிகளில் தினசரி இரண்டு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

* ஊரடங்கு காலத்தில் தொற்று குறைந்திருந்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு அவசியமாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com