"ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்" - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை, ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என முடிவெடுத்து அறிவிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதாகவும், அந்த குழு தனது முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, தனது ஆலோசனைகளை முதலமைச்சரிடம் நாளை

தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும், இது குறித்து, தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை, தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com